மறைக்கல்வி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மறைக்கல்வி மாணவர்களை ஊக்கப்படுத்தி குமுழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து…

முதல்நன்மை அருட்சாதனம்

தாளையடி, செம்பியன்பற்று தெற்கு புனித யூதாததேயு ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 2 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்னும் கருப்பொருளில் கடந்த 28, 29, 30ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நிலையத்தில் நடைபெற்றது. மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு செயலாளர் அருட்தந்தை…

தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

தர்மபுரம் பங்கின் விசுவமடு புனித இராயப்பர ஆலய வளாகத்தில் மரியாயின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் இயங்கிவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய செபமாலை பவனி

வணக்கமாத இறுதிநாள் நிகழ்வாக செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பவனி கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி செம்பியன்பற்று கடற்கரையில் புனித பிலிப்புநேரியார் திருச்சொருபம் அமைந்துள்ள இடத்தில்…