யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய முதல்நன்மை

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 17 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

விடுமுறைக்கால மகிழ்வூட்டல் நிகழ்வு

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான விடுமுறைக்கால மகிழ்வூட்டல் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல…

கந்தரோடை றோசா மாதா ஆலய களஅனுபவ சுற்றுலா

குடும்பங்களுக்கிடையே உறவை வலுப்படுத்ததும் நோக்கில் கந்தரோடை றோசா மாதா ஆலய மக்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா இம்மாதம் 03ஆம் 04ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைமக்கள் குடும்பங்களாக திருகோணமலை மறைமாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு…

குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி

குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் பிரதம விருத்தினராகவும் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய அதிபர்…

பரந்தன் பங்கில் தாத்தா பாட்டியர் தினம்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் பரந்தன் புனித அந்தோனியார் மற்றும் முரசுமோட்டை புனித சதாசகாய அன்னை ஆலயங்களில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…