பண்டத்தரிப்பு பங்கு திருப்பாலத்துவ தினம்

பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ தினம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருத்தந்தையின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.…

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருப்பாலத்துவ சபை தினம்

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தினம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்பியன்பற்று – தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருவிழா

உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குனர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 1ஆம் திகதி…

மன்னார் மறைமாவட்ட ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு வருகின்ற 22ஆம் திகதி

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கடந்த மார்கழி மாதம் 14ஆம் திகதி நியமனம்பெற்ற, அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு வருகின்ற 22ஆம் திகதி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மடுத்திருத்தலத்தில் நடைபெற ஏற்பாடுகள்…

பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித் அவர்களின் கருத்து

இலங்கையில் அடக்குமுறைகள் அகற்றப்பட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கடந்த 1ஆம் திகதி சனிக்கிழமை கலகெடிகன நிட்டம்புவ புனித துன்ப முடிச்சுகளை அவிழ்க்கம் அன்ன ஆலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கொழும்பு உயர் மறை மாவட்ட…