உடையார்கட்டு பங்கில் தவக்கால ஞான ஒடுக்கம்

இல்லற வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 21, 22, 23ஆம் திகதிகளில் உடையார்கட்டு பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை…

குருமுதல்வருடனான சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 25வது கட்டளை தளபதியாக இவ்வருட ஆரம்பத்தில் பதவியேற்ற லேப்டினெண்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை…

முல்லைத்தீவு மறைக்கோட்ட திருவழிபாட்டு செயலமர்வு

தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக இடம்பெறும் இவ்ஆயத்த செயலமர்வு…

இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் முன்பள்ளி திறப்புவிழா

வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித ஆரோக்கியநாதர் முன்பள்ளி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டக்கச்சி முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர்…

கற்கடதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழா

கற்கடதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருச்செபமாலை, திருச்சிலுவைப்பாதை…