யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள NEFAD நெவாட் மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த நிர்வாக கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநரும் NEFAD தலைவருமான அருட்தந்தை அலோசியஸ் அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய கட்டடத்தொகுதியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன முன்னைநாள் இயக்குநர்கள் அருட்தந்தை ஜெயக்குமார் மற்றும் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டதுடன் யாழ். பல்கலைக்கழக மீன்பிடியியல் துறை தலைவர் கலாநிதி திருமதி சுதர்சினி அவர்கள் கலந்து சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் NEFAD மீன்வலை உற்பத்தி தொழிற்சாலை நிறைவேற்று சபை உறுப்பினர்களான யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம், மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், நிறுவன பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin