இலங்கைப் பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 10 மற்றும் 12 வயதுப் பிரிவு ஆண்கள் பெண்களுக்கான Future Soccer Kings “SAHAYARAJAH CHALLENGE TROPHY” கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் மாசி மாதம் 28 மற்றும் பங்குனி மாதம் 01ஆம் திகதிகளில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
12 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முதலாமிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் நெல்லியடி மத்திய கல்லூரி இரண்டாமிடத்தையும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
பெண்களுக்கான போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி முதலாமிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி இரண்டாமிடத்தையும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
அத்துடன் 10வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலாமிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி இரண்டாமிடத்தையும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
பெண்களுக்கான போட்டியில் யாழ்ப்பாணம் நடேஸ்வரா வித்தியாலயம் முதலாமிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி இரண்டாமிடத்தையும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

