Category: What’s New

சிறுவர் பூங்கா திறப்பு விழா

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த இயேசு சபை குருவான அருட்தந்தை எழில்ராஜன் அவர்களின் அன்புத்தாயார் இராஜேந்திரம் செல்வநாயகி அவர்கள் கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரின் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில்…

அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 15ஆவது வருட அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ஆம் திகதியன்று கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 15ஆவது வருட அஞ்சலி நிகழ்வு 18ஆம் திகதி இன்று சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை…

கண்டன அறிக்கை

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழினம் எதிர்கொண்ட பேரழிவில் கொல்லப்ட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்தல், மற்றும் கஞ்சி பரிமாறுபவர்களை கைதுசெய்தல் போன்றவை பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் நிலைத்த சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்கான பாரிய பின்னடைவாகுமென சுட்டிக்காட்டி யாழ்.…