Category: What’s New

உருத்திரபுரம் பங்கில் இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

உருத்திரபுரம் பங்கில் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மட பவளவிழா

மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடம் ஆரம்பிக்கப்பட்டதன் 75வது ஆண்டு பவளவிழா நிகழ்வு கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. மட அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்கள் கலந்து மட சிற்றாலயத்தில் நன்றித்திருப்பலி…

குருநகர் பங்கு உறுதிப்பூசுதல்

குருநகர் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற…

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும்…

Combined Carol பாடல் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பாடசாலைகள் இணைந்து முன்னெடுத்த 71ஆவது Combined Carol பாடல் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித பரியோவான் கல்லூரியில் நடைபெற்றது. வட மாகாணத்தை சேர்ந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி, வட்டுக்கோட்டை…