முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் கப்புச்சியன் அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் Capital Campus இல் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
Capital Campus இயக்குநர் அருட்தந்தை டேவிட் டொமினிக் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளியிணைப்பு படகு இயந்திர திருத்துனர் கற்கைநெறி மற்றும் தகவல் தொழினுட்ப உதவியாளர் கற்கைநெறியில் NVQ 3ஆம் தரத்தை நிறைவுசெய்தவர்கள் மற்றும் கீபோட் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களென 26 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வவுனியா தரணிக்குளம் புனித ஜோசப்வாஸ் கப்புச்சியன் மறைப்பணித்தள அதிபர் அருட்தந்தை ஜேம்ஸ் ஜெறிக் குயின்ரஸ், வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் மற்றும் யாழ்ப்பாணம் தொழினுட்ப கல்லூரி விரிவுரையாளரும் தகவல் தொழினுட்ப கற்கைநெறியின் இணைப்பாளருமான திரு. அமிர்தநாதர் ஜெரின் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

