JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 26.02.2022
https://youtu.be/xsKwLNgXRrA
https://youtu.be/xsKwLNgXRrA
கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்திற்கான புதிய அலுவலகமும் அங்கு அமைக்கப்பட்டுவந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் 18ஆம் திகதி சனிக்கிமை அன்று ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாரீசன்கூடல் பங்கில் முன்நாள் மறையாசிரியர்களை கௌரவிக்கும் சேவைநலன் பாராட்டுவிழா 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை சேந்தாங்குளம் கடற்ரையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாணவர் விடுதியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்கள் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்கு கிழக்கு ஆயர்கள் மாமன்றத்தின் அமைதி ஆய்வு நிறுவனம் அமைதி நல்லிணக்கம் மற்றும் வன்முறைகளற்ற பண்பாட்டை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு திறந்த ஓவியப் போட்டி ஓன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளது.