Author: admin

மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய சமூக அறநெறி நிறுவனம் மற்றும் சமூக தொடர்பு அருட்பணி நிலையத்திற்கு புதிய இயக்குநர்கள்

மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய சமூக அறநெறி நிறுவனத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்கள் கடந்த 30ஆம் திகதி சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ அவர்களின் முன்னிலையில் அருட்தந்தை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன்…

புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகளால் மாணவர்களுக்கான மாலைநேர ஆங்கில வகுப்புக்கள்

இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றிவரும் புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகளால் அங்கு முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான மாலைநேர ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் திங்கள் முதல்…

e – கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான அக அமைதி பயிற்சி பட்டறை

அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் நடாத்தப்படும் e – கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான அக அமைதி பயிற்சி பட்டறை நிகழ்வு 4ஆம் 5ஆம் திகதிகளில் மொனராகலை விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.…

அருட்தந்தை S.J ராஜநாயகம் அவர்கள் இறைவனடி சேர்ந்தர்

இளவாலை புனித யாகப்பர் ஆலயப் பங்கைச் சேர்ந்தவரும் யாழ். மறைமாவட்டக் குருவுமாகிய அருட்தந்தை S.J ராஜநாயகம் அவர்கள் 06ஆம் திகதி திங்கட்கிழமை இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை ராஜநாயகம் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டப் பங்குகளில் அளப்பரிய பணியாற்றியதுடன் யாழ்.…

ஊர்காவற்துறை திருக்குடும்ப கன்னியர் மட 125ஆவது ஆண்டு யூபிலி

ஊர்காவற்துறை திருக்குடும்ப கன்னியர் மடம் ஸ்தாபிக்கப்பட்டதன் 125ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. கன்னியர்மட முதல்வி அருட்சகோதரி தயாநாயகி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும்…