Author: admin

குளமங்கால் பங்கு புனித சவேரியார் ஆலய சிறப்பு நிகழ்வு

குளமங்கால் பங்கு புனித சவேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் நோயாளர்களைப் பார்வையிட்டதுடன் சிறப்பாக…

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள்

யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பிரதான பாடங்கள், துணைப்பாடங்கள், சிறப்புப் பாடங்கள் என மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்படும் இந்நுண்கலை வகுப்புக்களில் புதிதாக இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், யாழ். டேவிட் வீதியில்…

யாழ். திருமறைக் கலாமன்ற பொங்கல் விழா

யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா நிகழ்வுகள் 15ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில்…

அருட்தந்தை றமேஸ் அவர்களுக்கு ‘தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்’ விருது

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் ‘தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்’ என்னும் உயர்நிலை கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…

கத்தோலிக்க அருங்கொடை புதுவாழ்வு குழுமத்தில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு

கத்தோலிக்க அருங்கொடை புதுவாழ்வு குழுமத்தில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள இறைதியான இல்லத்தில் நடைபெற்றது. புதுவாழ்வு குழுமத்தின் ஆன்மீக குரு அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…