Author: admin

விசுவமடு புனித இராயப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

தர்மபுரம் விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

மன்னார் மறைமாவட்டம் மாந்தை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மன்னார் மறைமாவட்டம் மாந்தை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில்…

அளம்பில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருநாள்

அளம்பில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருநாள் கடந்த 04 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 31ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 03ஆம்…

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் இறையியல் கருத்தரங்கு

‘உருமாற்றத்துக்குரிய இறையியல் கல்வி’ எனும் கருப்பொருளில் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இறையியல் கருத்தரங்கு கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை நடைபெற்றது. மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…