Author: admin

குடும்பங்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழங்காவில் இரணைமாதா நகர் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இணைப்பாளர்…

தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 5ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் தலைமையில் ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…

அகில இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்டப் போட்டி

அகில இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 16 வயதிற்குட்பட்ட Division 2 நிலை 3 அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டி கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய…