Author: admin

காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை றாகம பிரதேசத்தில் அமைந்துள்ள தேவட்ட தியான இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜிகான் குணதிலக அவர்கள்…

கரவெட்டி புனித பரலோக அன்னை ஆலய திருவிழா

கரவெட்டி புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14 ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

சேந்தான்குளம் வாழ்வகம் மருதமடு அன்னை ஆலய திருவிழா

மாரீசன்கூடல் பங்கிற்குட்பட்ட சேந்தான்குளம் வாழ்வகம் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

வாகரை புனித இராயப்பர் ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் வாகரை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அலன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

ஆசிய ஆயர் பேரவை மாநாடு

இவ்வருடம் அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவுள்ள கூட்டொருங்கியக்க ஆயர் பேரவையின் இரண்டாவது அமர்வுக்கான ஆயத்த செயற்பாடுகளில் ஒன்றாக முன்னெடுக்கப்பட்ட ஆசிய ஆயர் பேரவை மாநாடு இம்மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தாய்லாந்து நாட்டின் பாங்கொக் நகரில் நடைபெற்றது.…