Author: admin

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள்

இறை அழைத்தலை ஊக்குவித்து மறைமாவட்ட குருக்களை உருவாக்கும் ஆரம்ப தளமாக அமைந்துள்ள யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இறை அழைப்பை இனங்கண்டு குருத்துவ வாழ்விற்கான தெரிவை மேற்கொள்ளும் தளமான இக்குருமடத்தில் உருவாக்கம்பெற விரும்பும் மாணவர்கள் பங்குத்தந்தையர்கள்…

தேசிய மறையாசிரியர் பயிற்சி பாசறை

இலங்கை தேசிய மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் பயிற்சி பாசறை 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று றாகமவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. தேசிய மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை பெனட் சாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் றாகம தேவத்தை தியான இல்லத்தில் இடம்பெற்றுவரும்…

யாழ். மாவட்ட சர்வமத பேரவை விசேட கூட்டம்

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் விசேட கூட்டம் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர் கிருபானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள், போதைப்பொருள் பாவனையின் தீமைகள் ஆகிய…

20 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்தாட்ட அணி வீரர்களுக்கான தெரிவு

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் அகில இலங்கை பாடசாலைகளிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்தாட்ட அணி வீரர்களுக்கான தெரிவு அண்மையில் நடைபெற்றது. இத்தெரிவில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ரூபன் மதுமிதன், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி…

இரத்ததான முகாம்

இளவாலை போயிட்டி புனித லூர்து அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 30 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.