Author: admin

அருட்சகோதரி மேரி எவரெஸ்ரா திருச்செல்வம் அவர்களின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி

சொமஸ்கள் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி எவரெஸ்ரா திருச்செல்வம் அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கடந்த மாசி மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு தன்னாமுனையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் தன்னாமுனை…

முல்லைத்தீவு பங்கு கள அனுபவ சுற்றுலா

முல்லைத்தீவு பங்கில் இளையோர், பாடகர் குழாமினர் மற்றும் பீடப்பணியாளர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பயணத்தில் கேகாலை, கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள…

வளலாய் மடு அன்னை ஆலய திறப்புவிழா

பலாலி பங்கின் வளலாய் மடு அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஆலய திறப்புவிழா கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள்…

கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் புதிய தியான மண்டபம்

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சிறுநாவற்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த தியான மண்டப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. தியான இல்ல இயக்குநரான இந்திய நாட்டின் வின்சென்சியன் சபையை சேர்ந்த…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய முதல்நன்மை

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 17 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.