Author: admin

கலைநிலா அரங்கு

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட கலைநிலா அரங்கு கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அழகியல் கல்லூரியில்…

திருவிவிலிய அறிவுத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் 12 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு பங்கு ரீதியாக நடைபெற்ற பரீட்சையில் உயர் புள்ளிகளைப்பெற்ற 2250 மாணவர்கள்…

பால்நிலை சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இளவாலை மறைக்கோட்ட இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பால்நிலை சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பத்திநாதன்…

திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடம்பெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில்…

நற்கருணை கண்காட்சி

மணற்காடு பங்கில் இவ்வருடம் முதல்நன்மை பெறவுள்ள சிறார்களால் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.