Author: admin

விழிப்புணர்வு வீதி நாடகம்

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமூக தொடர்பு அருட்பணி மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் ஜிம்பிரவுண் நகர் திருஇருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர்…

பொதுநிலையினர் கழக கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய செயற்குழு தெரிவு, பொதுநிலையினர் கழக யாப்பு விளக்கம்…

துடுப்பாட்ட போட்டி

பங்குமக்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வலயங்களுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டி கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின்…

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய முதல்நன்மை

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய முதல்நன்மை

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை வசந்தன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்த திருப்பலியில் 05 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.