‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு

naan jan-mar

– யஸ்ரின் யோர்ஜ்

‘நான்’ உளவியல் சஞ்சிகை யின் 42வது ஆண்டு சிறப்பு மலர் தை – பங்குனி, 2017 வெளிவந்துள்ளது. கூட்டு முயற்சியில் ஈடுபடல் எனும் தலைப்பில் ஆசிரியர் Dr.d.வின்சன் பற்றிக் (அ.ம.தி) எழுதியுள்ள கட்டுரையில்  ‘நாம் என்ற சமூகத்தை உள ரீதியாக கட்டி எழுப்புவதே எமது இலக்காகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்சஞ்சிகையின் ஆக்கங்களாக மயூரன் எழுதிய மனிதம், சாவியின் மனிதம் இனிதாகிறது, ஆனைக்கோட்டை றொனி எழுதிய புது வாழ்வில் பயணிக்க வழிகள் பத்து, திருமதி பி.எவ்.சின்னத்துரையின்  முதுமையில் இனிமை, ஜோ.ஜெஸ்ரின் எழுதிய வெற்றிப்பயணத்திற்கு வித்திடுங்கள், உளசமூகசீராளன் யோசப்பாலாவின் உங்கள் உறவாடலில் ஏற்படும் உளப்பதிவுகள் எப்படி?, னச.க.கஜவிந்தன் எழுதிய சிறுவர் உள சமூகப் பிரச்சனைகள் ஓர் நோக்கு ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் வர்மிலன் டிலக்சனா எழுதிய ஆழுமை மிக்க மாணவர்களை உருவாக்குதல், மன்னார் துரம் எழுதிய மது போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்களும் தலையீடும், பா.சுகந்தினியின் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தல், கைதடி ந.துளசி எழுதிய பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மருத்துவர் எஸ்.சிவதாஸ் எழுதிய நபரிடைத்திறன்கள், கந்தர்மடம் அ.அஜந்தனின் மனிதனின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் போன்ற கட்டுரைகளும்  இடம்பெற்றுள்ளன.

மீசாலையூர் கமலாவின்  மனிதாபிமானமே மகத்துவத்தை இழந்து விடாதே, அபீர்ராஜனின் மாண்பினைப் பேணிடின், சி.வி.சசிகரனின்  தோட்டாக்கள், எம்.குயிலரசியின் மனித நேயம், கலிஸ்ராவின் மனிதருள் மனிதம் ஆகிய கவிதைகளும் மலரை சிறப்பிக்கின்றது. இன்றைய சமூகத்தில் உளவியல் தாக்கங்கள் எவை? அதற்கு சமயம், சமூகம், தனிநபர் தீர்வு குறித்து எவ்விதமாக அணுகலாம் என்ற தலைப்பில் சமய சமூக பிரதி நிதிகளின் கருத்துக்களை நேர்காணலைத் தொகுத்துள்ளார் ஜோ.ஜெஸ்ரின்.

மேற்படி தொகுப்பு நேர்காணலில் யாழ் மாவட்ட சர்வமத ஒன்றிய தலைவர் அருட்பணி சி.ஜொ.ஜெயக்குமார், மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் அருட்பணி இமானுவேல் செபமாலை, சுவாமி கலாநிதி ஜெ.இ.ஜெயசீலன், மன்னார் மெளலவி செ.அசிம், சமூக சேவையாளர் வைதேகி, உளசமூகப் பணியாளர் லெ சிரோமி, மலர் சின்னையா, அ.பஸ்னா, உடுத்துறை வடக்கு சே.ஜெயதிலீபன், பொலிகண்டி வடக்கு அ.தாமரைச்செல்வி, செ.யோசப்பாலா, நோர்வே நாட்டு செல்வி கரோலின் ஆகியோரின் கருத்துக்கள் நான் உளவியல் சஞ்சிகையில் பிரதான அம்சமாகக் காணப்படுகின்றது. இச்சஞ்சிகையின் தனிப்பிரதி ஒன்றின் விலை ரூபாய் 50/-

Your email address will not be published. Required fields are marked *