வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வின்சென்ட் டி போல் பந்தியினரால் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சுரூப ஆசீர் வழங்கப்பட்டதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆலயத்தை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

