புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா கார்த்திகை மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை பிரதான மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன.

அரங்க நிகழ்வில் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடனம், கரோல் கீதங்கள், நாடகம், நடனங்கள், நாட்டிய நாடகம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்ளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin