சுன்னாகம் சூராவத்தை புனித திரேசம்மாள் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

