சமூக தொடர்பாடல் ஆண்டு சிறப்பு நிகழ்வாக இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி கண்காட்சி ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கண்காட்சியை யாழ். மறைமாவட்ட சமூக தொடர்பாடல் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து ஆரம்பித்துவைத்தார்.

இக்கண்காட்சியில் மறைக்கல்வி மாணவர்களால் திருவிவிலியம், பத்துக்கட்டளைகள், திருச்சபையின் கட்டளைகள், ஆலய வரலாறு, திருத்தந்தையர்கள், திருப்பலி, வழிபாடுகள், சமூக தொடர்பு சாதனங்களின் நன்மை தீமைகள் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களென பலரும் கலந்து இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.

அத்துடன் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறைக்கல்வி தின சிறப்பு திருப்பலியும் அன்றைய தினம் காலை நடைபெற்றது.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை றெனால்ட் செறில்நெஸ் அவர்களும் இணைந்து செபித்தார்.

By admin