மட்டக்களப்பு மறைமாவட்டம் தேற்றாத்தீவு பங்கின் பட்டிருப்பு களுவாஞ்சிக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னை தெரேசா ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை தேவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் அன்னை தெரேசாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டாவது ஆலயம் இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin