திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு தை மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கடந்த ஆண்டின் செயற்திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மறைமாவட்டத்தில் “அன்பிய ஆண்டாக” கடைப்பிடிக்கப்படவுள்ள 2026ஆம் ஆண்டில் திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மேய்ப்புப்பணி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள், துறவற சபைகளின் பிரதிநிதிகள், பங்கு பிரதிநிதிகள், பொதுநிலையினரென 110 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

