திருக்குடும்ப கன்னியர் சபையில் நித்திய அர்ப்பணத்தை அண்மையில் நிறைவேற்றிய மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தை சேர்ந்த அருட்சகோதரி செறின் சேவியர் அவர்களின் வரவேற்பு நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்றித்திருப்பலியும் அருட்சகோதரிக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன.

திருப்பலியை மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் ஊர்காவற்துறை, கரம்பொன் திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

கரம்பொன் பங்கிலிருந்து 1999ஆம் ஆண்டு நித்திய அர்ப்பணத்தை நிறைவேற்றிய செபமாலை கன்னியர் சபை அருட்சகோதரி ஜெயசீலி அவர்களை தொடர்ந்து 26 வருடங்களின் பின்னர் அருட்சகோதரி செறின் சேவியர் அவர்கள் இரண்டாவது அருட்சகோதரியாக நித்திய அர்ப்பணத்தை நிறைவேற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin