விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் English Primary School ற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய பாடசாலைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம், சபையின் தலைவி அருட்சகோதரி டெக்லா மேரி, அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.
இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் புனித இராயப்பர் முன்பள்ளியை நடாத்திவரும் நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான ஆங்கில் மொழி பாடசாலையை உருவாக்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

