பருத்தித்துறை மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் தை மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

கியூரியா இயக்குநர் அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கூட்டமும் நடைபெற்றன.

கூட்டத்தில், யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் சமூகத்தொடர்பாடல் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு WhataApp செயலி ஊடாக குழுவொன்றை உருவாக்கி செபத்தேவையில் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்காக தொடர் செபமாலையில் ஈடுபடவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய அங்கத்தவர்களடன் 60ற்கும் அதிகமான கியூரியா அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin