யாழ். மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள சமூகதொடர்பாடல் ஆண்டை மையப்படுத்திய குருக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு தை மாதம் 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர் திரு. அமிர்தநாயகம் நிக்ஸன் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரை வழங்கினார்.
கருத்துரையை தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் இயங்கும் ஆணைக்குழுக்களுக்கான இவ்வருட செயற்திட்ட வரைபுகளை தயாரிக்கும் குழுக்கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருடாந்த செயற்திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 100 வரையான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

