யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட சமூகத் தொடர்பாடல் ஆண்டுக்கான வருடாந்த செயற்திட்ட ஆரம்ப சிறப்பு நிகழ்வு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் “சமூக தொடர்பாடல் சாதனங்கள் சமூகத்தை பலப்படுத்துகின்றதா? பலவீனப்படுத்துகின்றதா? என்னும் தலைப்பில் விவாதமேடையும் தொடர்ந்து மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இவ்வருட செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலுடன் கழக கூட்டமும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 50 வரையான கழக அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

