மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் ஆலய மணிக்கோபுரத்தில் அமைந்துள்ள அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் உருவச்சிலைக்கு பங்குத்தந்தையால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் பங்குமக்களால் அருட்தந்தையின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து இரங்கல் திருப்பலியும் இடம்பெற்றன.
திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்கரன்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையின் சகோதரி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

