யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட “ஒன்றிணைந்த தலைமைத்துவம் மற்றும் உளவியல் ஆற்றுப்படுத்தல்” செயலமர்வு தை மாதம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகளின் “சங்கமம்” இல்லத்தில் நடைபெற்றது.

திருக்குடும்ப கன்னியர் மட பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம், முல்லைத்தீவு அமதித்தென்றல் உளவியலக இயக்குனர் அருட்தந்தை விஜேந்திரன் மற்றும் அவரது குழுவினர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், தலைமைத்துவ பயிற்சிகள், குழுச்செயற்பாடுகள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 45 வரையான மாணவத்தலைவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin