மறைக்கல்வி மாணவர்களிடையே இசைக்கருவிகள் மீட்டும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முகமாக மானிப்பாய் புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை தை மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மானிப்பாய் புனித அந்தோனியார் நற்செய்தி அறிவிப்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. சுதன் அவர்கள் வளவாளராக கலந்து இசைக்கருவிகளை மீட்டும் பயிற்சிகள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 50 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin