முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் கப்புசின் சபையினரால் நடாத்தப்படும் Capital Campus இல் கீபோட் இசைப் பயிற்சியில் இணைந்து பயிற்சிபெறும் மாணவர்கள் ஆலயங்களில் கீபோட் இசைக்கருவி மீட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு சிறப்பு நிகழ்வாக கூழாமுறிப்பு பங்கின் மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்தில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்க்கிழமை நடைபெற்ற திருப்பலியில் Capital Campus இல் கீபோட் பயிற்சிபெறும் மாணவர்கள் கலந்து திருப்பலி பாடல்களுக்கு இசைக்கருவி மீட்டி வழிபாடுகளை சிறப்பித்தனர்.
திருப்பலி நிறைவில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு பயிற்சிபெறும் மாணவர்கள் மாதத்தில் ஒரு முறை மறைக்கோட்ட ஆலயங்களுக்கு சென்று திருப்பலியில் கலந்து இசைக்கருவி மீட்டி வழிபாடுகளை சிறப்பிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படடுள்ளதாகவும் இச்செயற்பாடுகளில் பெற்றோர்களும் பங்குத்தந்தையர்களும் அதிக ஆர்வம் காட்டிவருவதுடன் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளையும் இப்பயிற்சி நெறியில் இணைக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும் Capital Campus இயக்குனர் கப்புச்சின் சபை அருட்தந்தை டேவிட் மொமினிக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

