தைப்பொங்கல் தினத்தை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் சிறப்பு நிகழ்வு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புங்குடுதீவு பங்கில் நடைபெற்றது.
மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளரும் புங்குடுதீவு பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் தலைமையில் புங்குடுதீவு கரந்தலி வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து பங்குமக்களுக்கான கலாச்சார விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

