பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் தை மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் சமூக தொடர்பாடல் ஆண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், என்பன இடம்பெற்றன.

பருத்தித்துறை புனித தோமையார் ஆலய மறையாசிரியர் திரு. ஜெயசீலன் அவர்கள் கலந்து சமூக தொடர்பாடல் தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் 35 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin