கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பித்து யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தை மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பேரவை இணைத்தலைவரும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வருமான அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நான்கு மதங்களையும் சேர்ந்த 50 தேவையிலுள்ள மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், நாகவிகாரை பிரதம குரு மீஹாஹயன்துரை சிறிவிமல தேரர், ரலீம் மௌலவி, பேரவை அங்கத்தவர்கள், அருட்சகோதரர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin