சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 88வது பாரம்பரிய வருடாந்த விளையாட்டுவிழா தை மாதம் 3,4ஆம் திகதிகளில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் வழிநடத்தலில் செல்வன் செல்வநிலோயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் செல்வன் குருசாந்த் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுகளின் ஆரம்பத்தில் சிறப்புத் திருப்பலி இடம்பெற்றது.

திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் பங்குத்தந்தை அவர்களால் மன்றக்கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து ஒலிம்பிக் தீபமும் ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

இப்போட்டிகளில் பங்குமக்கள் அருட்பணி ஆபிரகாம், அருட்பணி பெனட் என இரண்டு இல்லங்களாக பிரிந்து நடைபெற்ற விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பங்குபற்றினர். இந்நிகழ்வில் செல்வன் மார்க்கஸ் ஐவர் அவர்களை இதழாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வருடாந்த விளையாட்டு விழா சிறப்பிதழும் வெளியிடப்பட்டது.

போட்டி நிறைவில் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் சுன்னாகம் கொமர்~ல் வங்கி கிளை முகாமையாளர் திரு. கந்தவனம் சுதனன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ், மறைமாவட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக சபை அங்கத்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் தாவடி கிழக்கு J/193 கிராம அலுவலகர் திருமதி தினேஸ்கரன் சர்மிளா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

 

By admin