மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழு பணியாளர்களுக்கும் தொண்டன் பத்திரிகை குழாமினருக்குமான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒன்றுகூடலும் அன்பளிப்பு பரிமாற்றமும் இடம்பெற்றன.

பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தொண்டன் பத்திரிக்கை எழுத்தாசிரியர்கள், பங்கு மட்டத்தில் பத்திரிக்கை விற்பனை செய்வோர், ஒத்துழைப்பு வழங்குவோர், மறைமாவட்ட மறையருவி செய்திகள் வாசிப்போர் மற்றும் சமூகத் தொடர்பு நிலையத்தோடு நீண்ட கால உறவு வைத்திருப்போரென பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் தொண்டன் பத்திரிகை தற்போது 03 மாதங்களிற்கு ஒரு முறை வெளிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin