2025ஆம் ஆண்டு, இறையருளோடுகூடிய, பல வாழ்வியல் அனுபவங்களையும், இயற்கை அனர்த்தம் உருவாக்கிய வலிகளையும், வேதனைகளையும் எமக்கு தந்து சென்றிருக்கும் ஆண்டாக அமைந்திருப்பதுடன் நம்பிக்கையின் திருப்பயணிகளாக யூபிலி அருளை நாம் பெற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற இறையருளையும் வாரித்தந்த ஆண்டாகவும் அமைந்துள்ளதென யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் தனது புதுவருட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு, புதிய வருடத்தை இறைநம்பிக்கையோடு ஆரம்பிக்கும் எமக்கு திருஅவை புனித மரியன்னையை வழிகாட்டியாகவும், அன்புத்தாயாகவும் தந்து, நம்பிக்கையோடு எமது வாழ்வை ஆரம்பிக்க அழைத்துநிற்கின்றதென எடுத்துரைத்த ஆயர் அவர்கள் அன்னை மரியாளின் முன்மாதிரிகையை பின்பற்றி தாழ்ச்சியுள்ளம் கொண்டவர்களாக தேவையில் உள்ளவர்களுக்கு சேவையாற்றி எம் வாழ்வாலும் வார்த்தையாலும் மனித நேயம் தழைத்தோங்க வழி அமைப்போமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் யாழ். மறைமாவட்டத்தில் இவ் வருடம் சமூக தொடர்பு ஆண்டாக அனுஸ்டிக்கப்படவுள்தை நினைவூட்டடிய ஆயர் அவர்கள் தொடர்பாடலின் பாதுகாவலர் புனித கபிரியேல் வானதூதரென குறிப்பிட்டு தொடர்பாடலின் அதி உன்னத வெளிப்பாடான வார்த்தை மனுவுருவேற்பை கொண்டாடி, இறைவன் எம்மோடு மேற்கொண்ட தொடர்பாடலின் ஆழமான அனுபவத்தை சுவைத்திருக்கும் நாம், பிறந்திருக்கும் புதிய வருடத்தில் தொடர்பாடலை சீர்ப்படுத்தி முரண்பாடுகளையும் பகைமையுணர்வுகளையும் களைந்து புது உலகைப்படைக்க முன்வருவோமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

By admin