நள்ளிரவு ஆராதனைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலிகள் இடம்பெற்றுள்ள நிலையில் புனித மரியன்னை பேராலயத்திலும் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

