யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி ஆண்டை நிறைவுசெய்த அருட்தந்தையர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் அருட்தந்தையர்களுக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றன.

