யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்களின் கரோல் வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை குருமட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருமட மாணவர்களின் கிறிஸ்மஸ் கரோல் கீதங்களும் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் அருளுரையும் இடம்பெற்றன.

இவ்வழிபாட்டு நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin