கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை சிறப்பித்து உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய இறைமக்களால் மேடையேற்றப்பட்ட “சோதி மனுவான காதை” தென்மோடி நாட்டுக்கூத்து பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
தும்பளையூர் கலையரசு கலாபூசணம் வேதநாயகம் அவர்களின் எழுத்துருவாக்கத்தில் அண்ணாவியார் கலைமருது ஜோன்ஸ் அவர்களின் நெறியாள்கையில் ஆற்றுகை செய்யப்பட்ட இக்கூத்தில் அரங்கிலும் அரங்க பின்ணணியிலும் 35ற்கும் அதிகமான கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தனராகவும் அமதிகரங்கள் இயக்குனர் அருட்தந்தை செபமாலை அன்புராசா, மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. கிரிதன் டென்சியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

