அன்பியங்களை இணைத்து சாட்டி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடுகள் அண்மையில் அங்கு நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயத்திலும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்திலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்பிய குழுக்கள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin