தீவகம் எழுவைதீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
11ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களும் நற்கருணை விழா திருப்பலியை புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை புதிதாக அமைக்கப்பட்ட புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

