இளவாலை பெரிய விளான் Kids World Montessori ஆண்டுவிழா, பரிசளிப்பு, மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன.

பாடசாலை இயக்குநர் திருமதி கபாடியா லிசா மேப்பிள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் கடந்த கல்வியாண்டில் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மானிப்பாய் ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் திருமதி. விஜயகுமாரி முருகேசபிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin