திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி றீனா இராசையா அவர்கள் மார்கழி மாதம் 26ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர் தனது முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை 1969 ஆண்டு நிவைவேற்றி தனது துறவற வாழ்வை ஆரம்பித்து கல்விப்பணியுடன் போர்க்காலத்தில் உளவியல் பணியையும் ஆற்றியவர்.
இவர் நீண்டகாலமாக உளவியல் ஆற்றுப்படுத்தல் பணியில் தன்னை ஈடுபடுத்தி உளவியளாளர்களை பயிற்றுவித்து யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள அமலமரித்தியாகிகள் சபையின் வளர்பிறை ஆற்றுப்படுத்தல் நிலையத்தில் பணியாற்றியவர்.
இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
