வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முன்னெடுத்த பண்பாட்டு விழாவும் பாரம்பரிய கண்காட்சியும் மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது.
அமைச்சின் செயலாளர் உயர்திரு பற்றிக் டிரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் கலைக்குரிசில், இளம் கலைஞர் மற்றும், சிறந்த நூல்களுக்கான விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
நூல்களுக்கான விருது வழங்கலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களின் ‘விருத்தப் பாமழை ஆயிரம்’ நூலுக்கு வடமாகாண ரீதியில் கவிதைத் துறைக்கான சிறந்த நூல் விருது வழங்கப்பட்டது.
அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களின் இரு நூல்களுக்கு தேசிய சாகித்ய விருதும் நான்கு நூல்களுக்கு மாகாண விருதும் ஏற்கனவே கிடைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

